சைக்கிளிங் செய்தவர் நிலை தடுமாறி விபத்து : உயிர்தப்பிய காட்சி!!
17 September 2020, 11:16 amதிருப்பூர் : தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளிங் சென்றவர் நிலை தடுமாறி விழுந்த நிலையில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி வழியாக கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையானது செல்கிறது. இந்த சாலையில் அதிகாலை நேரத்தில் ஒரு சிலர் அதிவேகமாக சைக்கிளிங் செல்வது வழக்கமாக காணமுடியும்.
இந்நிலையில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளிங் சென்ற ஒருவர் திடீரென தானாகவே நிலை தடுமாறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததலும், ஹெல்மெட் அணிந்திருந்ததாலும் உயிர் தப்பினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்பொழுது வலைதளங்களல் பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சைக்கிளிங் செல்பவர்கள் சாலை நன்றாக இருக்கும் காரணத்தால், தேசிய நெடுஞ்சாலை என்பதை மறந்து வேகமாக செல்கின்றனர். இதுபோன்று தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் சைக்கிளிங் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
0
0