கோவையில் சிலிண்டர் வெடித்து விபத்து : கேஸ் கசிவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 1:14 pm

வடமாநில தொழிலாளி பிஜாய். இவர் கல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர். கோவையில் தங்கி இருந்து தங்க நகை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது தங்கியிருந்த வீட்டில் எல்பிஜி கேஸ் கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தீக்காயம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

மேலும் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருத்த நிலையில் கேஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தெரிவித்துள்ளார்

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!