‘அப்பா தான் என்னுடைய ரோல் மாடல்‘ : தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வான பள்ளி மாணவி பெருமிதம்!!

Author: Udayachandran
24 July 2021, 5:04 pm
12th Student in Cricket Team -Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : தமிழ்நாடு கிரிக்கெட் மகளிர் அணியில் விளையாட மயிலாடுதுறை தனியார் பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாட ஆண்டுதோறும் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாட மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகின்ற மாணவி தன்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாணவிகளில் ஆறாவது இடத்தில் தேர்வாகியுள்ளார். இந்தப் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 450 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் மயிலாடுதுறையை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு பெற்றுள்ளார்.

தேர்வாகியுள்ள மாணவிக்கு பள்ளியின் தாளாளர், நிறுவனர், ஆசிரியர்கள், பயிற்றுநர் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

இது குறித்து மாணவி தன்யா கூறுகையில் கிரிக்கெட் விளையாட்டில் சிறுவயதிலிருந்து ஆர்வம். எனது தந்தையார் மூலமும் கிரிக்கெட் பயிற்றுநர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலமாகவும் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு இந்தியாவிற்கான மகளிர் அணியில் விளையாட வேண்டும் என்பதே என் கனவு என்றார்.

Views: - 227

2

0