உறவினர் வீட்டில் ரூ.70 திருடியதாக தண்டனை : சிறுமி உயிரிழப்பு!!
Author: kavin kumar9 January 2022, 8:47 pm
பெரம்பலூர்: உறவினர் வீட்டில் பணம் திருடியதாகக் கூறி தாய் தனது மகளுக்கு சூடு வைத்ததோடு மிளகாய் புகையை பிடிக்க வைத்தால் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டையில் வசிப்பவர் மணிமேகலை, இவரது மகள் மகாலட்சுமி (10) அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் 70 ரூபாயை திருடியதாக கூறி மகாலட்சமியை கண்டிக்க அவருக்கு சூடு வைத்ததோடு மிளகாய் புகையை சுவாசிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், வாயிலும் வலது தொடையிலும் சுடு காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Views: - 436
0
0