பாமக குறித்து தயாநிதி சர்ச்சைப் பேச்சு : காரை உடைத்து எதிர்ப்பு!!

23 December 2020, 11:41 am
Dhayanithi-Updatenews360
Quick Share

சேலம் : திமுக எம்பி தயாநிதி மாறனின் காரை வழிமறித்து பாமகவினர் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்று பிரச்சாரத்தை துவங்கி திமுகவினர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் திமுக எம்பி தயாநிதிமாறன் நேற்று தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

கூட்டத்தில் தயாநிதி மாறன் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பேது செய்தியாளர்கள் திமுக கூட்டணில் பாமக இடம்பெறுமா என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், பாமக யாருடன் பேரம் பேசி வருகிறது என்று தெரியவில்லை, ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுவிடம் பணம் இல்லை என்று விமர்சித்தார்.

கடந்த முறை அதிமுகவிடம் பேரம் பேசிய பாமக இந்த முறையும் பேரம் பேசி வருவதாக தகவல் வருகிறது என்று தெரிவித்தார். தயாநிதி மாறன் பேச்சு பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, பொட்டிபுரம் பகுதிகிளில் பேசி முடித்து விட்டு பூசாரிப்பட்டியை நோக்கி காரில் தயாநிதி சென்ற போது பாமவினர் திரண்டு கருப்பு கொடி காட்டினர்.

இந்த தகவல் அறிந்த திமுகவினர் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் தயாநிதி கார் கண்ணாடி உடைக்ப்பட்டது.

Image

இதையடுத்து இருதரப்பினரும் சாலை மறியல் செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதுகாப்பு சரி செய்து, இருதரப்பையும் சமாதானம் செய்தனர். தயாநிதி தங்கிய ஓட்டல் முன்பு பாமகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 15

0

0