தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : பாமக தலைவர் ஜிகே மணி வலியுறுத்தல்!!

24 December 2020, 6:18 pm
GK Mani -Updatenews360
Quick Share

திருவள்ளூர் : அதிமுக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் முடிவு செய்வார் என்றும் இட ஒதுக்கீட்டை தரக்குறைவாகப் பேசும் தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாமக துணை பொதுச்செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஜனபன் சத்திரம் பகுதியில் நடைபெற்றது.

பாமக தலைவர் ஜிகே மணி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகவின் போராட்டத்தை இழிவுபடுத்தும் தயாநிதி மாறனின் பேச்சுக்களை அவர்கள் கட்சியில் இருக்கும் வன்னியர்களே ஏற்கவில்லை திமுகவினருக்குள் ஏற்பட்ட விரக்தியால் இப்படி அவர்கள் பேசுகிறார்கள் என்றும் தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

துரைமுருகன் போன்று திமுகவில் இருப்பவர்கள் அவர்கள் கட்சியின் சூழலில் உள்ளார்கள். தலைமையை மீறி அவர்களால் பேச முடியாது அடங்கி உள்ளனர் எனவும் தேர்தல் நேரத்தில் பல புதிய கட்சிகள் வரும் இன்னும் பல கட்சிகள் வரும் என்றும் அதிமுக கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார் என்றும் கூறினார்.

இட ஒதுக்கீடு போராட்டத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை அடிப்படை உரிமைக்காக வன்னியர்கள் போராடுவதாகவும், வருகிற 30-ஆம் தேதி 380 இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தங்கள் கோரிக்கையை தேர்தல் வருவதற்குள் நிறைவேற்ற வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Views: - 16

0

0