தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 12:51 pm

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை மக்களவை தொகுதி புரசைவாக்கம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது, திமுக எம்பி தயாநிதி மாறன் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

2019 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய சென்னை எம்பியாகவும், 2024 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் களமிறங்கிய தயாநிதி மாறன், கடந்த முறை வெற்றி பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை முறையாக செலவு செய்யவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: +1 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்.. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி… சாதனை படைத்த கோவை மாவட்டம்..!!

இந்த பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தயாநிதி மாறன்.

தான் முறையாக நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்துள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தன்மீது வேண்டுமென்னேற அவதூறு பரப்புகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் 13வது நடுவர் மன்றத்தில் நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் இரு தரப்பு வாதங்களையும் விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?