அரை நிர்வாணத்துடன் கிடந்த உடல்.. அருகில் துப்பட்டா.. ஓசூரில் பரபரப்பு!
Author: Hariharasudhan22 November 2024, 2:12 pm
ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான பள்ளூர் பகுதியில் தனியார் மதுபானக் கடை உள்ளது. இந்த நிலையில், இந்த மதுபானக் கடை அருகே அரை நிர்வாணமாக சடலம் ஒன்று கிடந்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், அந்த சடலத்தின் அருகே துப்பட்டா ஒன்றும் இருந்து உள்ளது. இதனால், இது பாலியல் வன்கொடுமையாக இருக்குமோ என்ற எண்ணத்தில், இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலைப் பார்த்தனர்.
அப்போது, அந்த உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்து உள்ளனர். அதேநேரம், அது ஒரு ஆணின் உடல் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், ஆம்புலன்ஸில் சடலத்தை அனுப்பி வைத்து, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: பிரபல நடிகை வீட்டில் திருட்டு..போலீஸில் பரபரப்பு புகார்..!
இதன்படி, அவர் அழகுராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மேலும், அழகுராஜின் சடலம் அருகே துப்பட்டா, மதுபாட்டில், ஊறுகாய், இருசக்கர வாகனம், அந்த வாகனத்தில் நெய் டப்பாக்கள் ஆகியவை கிடந்து உள்ளது. இதனால், சடலமாக மீட்கப்பட்டவர் நெய் வியாபாரியாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டு உள்ள போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.