‘ஆசை’ பட பாணியில் ஆண் சடலம்… பிளாஸ்டிக் கவரில் சுற்றி கயிறுகள் கட்டியிருந்ததால் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 2:31 pm
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கன்னிவாடி காவல்துறையினர் மற்றும் கன்னிவாடி வனச்சரகத்தினர் துர்நாற்றம் வீசிய பகுதியில் ஆய்வு செய்தபோது பிளாஸ்டிக் கவரால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு கயிறுகளால் கட்டி ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இதை எடுத்து சடலத்தை ஆய்வு செய்த போது பல நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் தூக்கி எறியப்பட்ட சடலமாக இருக்கும் என்பதால் தற்போது காவல்துறை விசாரணையானது துவங்கி உள்ளனர்.
மேலும் இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து கன்னுவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது
தொடர்ந்து பன்றிமலை செல்லும் மலைச்சாலைகளில் சடலங்கள் மீட்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
