தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…உங்கள் மாவட்டத்தில் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

Author: kavin kumar
18 February 2022, 9:32 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 1,252 ஆக இருந்த நிலையில் இன்று 1,146 ஆக குறைந்திருக்கிறது. இன்று 81,145 பேரது மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 42 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக சென்னையில் 262 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் கோவையில் 188 பேருக்கும், செங்கல்பட்டில் 102 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திருப்பூரில் 49 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் 4,229 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 84 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,970 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,772 ல் இருந்து 20,681ஆக குறைந்துள்ளது.

Views: - 846

0

0