தீபாவளி கொண்டாட்டம் : உதகையில் குவிந்த சுற்றுலாபயணிகள்!!

14 November 2020, 7:29 pm
Ooty Park - Updatenews360
Quick Share

நீலகிரி : தீபாவளி பண்டிகையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமானோர் குவிந்தனர்.

இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இங்குள்ள தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களை காண ஏராளமானோர் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கும் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற சுற்றுலாத்தளங்கள் எதுவும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளதால் அரசு தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா ஆகிய இரு பூங்காக்களிலும் விடுமுறை நாட்களில் கணிசமான கூட்டம் காணப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று அனைத்து பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் ஏராளமானோர் குவிந்தனர்.

Views: - 37

0

0