கோவையில் இருந்து வயநாட்டுக்கு புறப்பட்ட DELTA SQUAD : சூப்பர் ஹீரோவாக களமிறங்கும் 25 வீரர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 2:17 pm

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் டெல்டா குவாட் இயங்கி வருகிறது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் அடங்கிய இந்த டெல்டா ஸ்குவாட் குழுவினர், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் மிகத் திறம்பட செயலாற்ற பயிற்சி பெற்றவர்கள்.

25 வீரர்கள் கொண்ட இந்த டெல்டா குழுவினர், கமாண்டர் ஈசன் தலைமையில், கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு புறப்பட்டனர்.

வயநாடு ,சூரல் மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில், மண்ணில் பலர் புதையென்று இருப்பதை துல்லியமாகக் கண்டறியும், சிந்தடிக் அப்ரைஸர் ரேடார் கருவி எடுத்துச் செல்கின்றனர்.

சேட்டிலைட் சிக்னல் மூலமாக இயங்கும் இந்த கருவி பயன்படுத்தி, மண்ணில் புதைகின்றவர்களை எளிதில் கண்டறிந்து மீட்க முடியும். ரப்பர் படகுகள், ரப்பர் ட்யூபுகள், உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் உள்ளிட்ட மீட்பு உபகரங்களுடன் டெல்டா குவாட் குழுவினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்.

இந்த டெல்டா ஸ்குவாட் இதுவரை 18 பேரிடர் பேரழிவுகளில் மீட்பு பணிகளை செய்த அனுபவம் பெற்றது. இந்த மீட்பு பணிகளில் 3,500 க்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!