10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.80 லட்சம் போச்சே : அரசு பேருந்தில் கைப் பைக்கு டிக்கெட் எடுக்காத பயணி போலீஸ் வசம் சிக்கினார்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 4:02 pm
80 Lakhs Trap - Updatenews360
Quick Share

நடத்துனரிடையே தகராறு செய்த நபரிடம் 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் ஏரியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் நடத்துனர் கைப்பை வைத்திருந்த குமாரை டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துனருக்கும் குமார் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நடத்துனர், பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்தார். அப்போது விசாரித்த போலீசார், குமார் வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான பையை சோதனை மேற்கொண்டதில் அந்த கைப்பையில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பணத்தை எண்ணி பார்த்தபோது 80 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பைனான்ஸ்காக வைத்திருந்த பணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பணத்திற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் குமாரை கைது செய்த காட்டூர் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 357

0

0