பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு : போலீசார் அதிரடி நடவடிக்கை…
Author: kavin kumar18 January 2022, 4:50 pm
வேலூர் : பேர்ணாம்பட்டு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில், இன்று பேரணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் ராஜன் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் தேவ பிரசாத் ஆகியோர் தலைமையில்10க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதிக்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மறைவான இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை உடனடியாக அழித்து அப்புறப்படுத்தினர். கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் காவல்துறையினர் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
0
0