நாளை வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி : குமரியில் மட்டும் 490 கோவில்களில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்!!

4 July 2021, 8:01 pm
Kanyakumari Temple- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாளை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் ல் இந்து, கிறிஸ்தவ, மற்றும் இந்து அறநிலைய துறைக்கு கட்டுப்பட்ட 490 கோவில்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் வழிப்பாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே கொரோனா தொற்று பரவல் தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழ்நாடு அரசு நாளை முதல் வழிப்பாட்டு தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதன்படி குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாகராஜா கோவில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் குமரி பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட 56 பெரிய கோவில்கள் என மொத்தம் 490 கோவில்களிலும் உள்பிரகாரம் வெளிபிரகாரம் கோவில் மதிற்சுவர்கள் கொடிமரம் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது.

நாளை காலை முதல் வழக்கமான பூஜைகளுடன் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என இந்து அறநிலைய துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜீத் உத்தரவின் பேரில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்றவைகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

Views: - 250

0

0