அனிருத்தை நேருக்கு நேர் பாக்க விரும்பாத தனுஷ்.? வெளியான புதிய காரணம்.!

Author: Rajesh
25 June 2022, 12:40 pm

மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்றதுமே ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், லிரிக் வீடியோவிலேயே அனிருத்தை பார்க்க முடியவில்லையேப்பா என ரசிகர்கள் புலம்பித் தள்ளி உள்ளனர். மாஸ்டர் – வாத்தி கம்மிங், டாக்டர் – செல்லம்மா, பீஸ்ட் – அரபிக் குத்து, டான் – பிரைவேட் பார்ட்டி என அனிருத் இல்லாமல் லிரிக் வீடியோ பாடலே இருக்காது.

ஆனால், தற்போது வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான தாய்க் கிழவி பாடலில் நடிகர் தனுஷ் மட்டுமே லிரிக் வீடியோவில் தோன்றி இருந்தார். ஒரு காட்சியில் கூட அனிருத் இல்லை. அதே போல, இந்த பாடல் குறித்த புரமோ வீடியோவில் அனிருத், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் பொன்னம்பலம் உள்ளிட்டரோ இடம் பெற்றனர் அப்போது தனுஷ் அங்கே இல்லை.

அனிருத்தையும் தனுஷையும் மீண்டும் ஒரே ஃபிரேமில் பார்க்கலாம் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இருவருக்குள்ள இருந்த பிரச்சனை இன்னும் முடிந்தபாடியில்லை என்றே தெரிகிறது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது மகன் லிங்காவின் பிறந்தநாளுக்காக சென்னைக்கு வந்து சென்றிருந்தார். திருச்சிற்றம்பலம் படத்தின் புரமோஷனுக்காக அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றாலும், அனிருத்தை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர் தனுஷ் தவிர்த்து வருவதாகவே தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அனிருத்தை, தனுஷ் தவிர்ப்பதற்கு வேறு ஒரு புதிய காரணமும் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது. தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைய முடிவு எடுத்திருப்பதால் அனிருத்தை தவிர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதே ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்