அரசு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசு பாக்ஸ்கள் பறிமுதல்

3 November 2020, 8:51 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நகர் பகுதிகளில் அரசு அனுமதியின்றியும், பாதுகாப்பு இல்லாலும் பதுக்கி வைத்திருந்த 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பாக்ஸ்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், பட்டாசுகளை விற்பனை செய்ய தீயணைப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று பட்டாசு கடைகள் வைக்க வேண்டும் எனவும், அதனை மீறி அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டம் நிர்வாகம் எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று தருமபுரி நகர காவல்துறையினர் அனுமதியின்றி யாராவது பட்டாசு விற்பனை செய்கிறார்களா என நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதிகோண்பாளையம், கொல்லப்பட்டி, நகரபேருந்து நிலையம் அருகே ஆகிய 3 இடங்களில் அனுமதியின்றி குடோன்களில் சுமார் 25 இலட்சம் ரூபாய் மதிப்பில் பட்டாசு பாக்ஸ்கள் பாதுகாப்பு இல்லாமல் விற்பனைக்கு அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகர காவல்துறையினர் பாட்டாசு பாக்ஸ்களை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்குகொண்டு சென்றனர். பாதுகாப்பு இல்லாமலும், அனுமதியின்றியும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Views: - 19

0

0