சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வயதான தம்பதிகள் பலி

26 November 2020, 9:32 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், வயதான தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வரதகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் வயது 77, விவசாயி அவரது மனைவி ராமாயி வயது 70. இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இன்று மாலை அவர்கள் வீட்டில் சமையல் செய்ய முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக சமையல் கியாஸ் சிலிண்டரிலில் கசிவு ஏற்பட்டது தெரியாமல் சமையல் செய்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்தது இதில் ராமாயி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலியே பலியானார்.

படுகாயமடைந்த கணவர் வெங்கடாசலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லும் வழியிலிலே பறிபதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சமையல் செய்யும் போது எதிர்பாரத விதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வயதான தம்பதையினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 16

0

0