ஆபாச வீடியோவை வெளியிட்டிருவேன்… தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது..!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 11:27 am

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரம் ஆதின மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இவரர பணம் கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி புகார் அளித்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதீனத்தின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதன்பேரில், அகோரம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாவட்ட தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!