இப்படி ஒரு வெற்றிப் படத்தை தவற விட்டாரா அஜித்..? வெளியான புதிய தகவல்.!

Author: Rajesh
6 April 2022, 4:25 pm
Quick Share

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாய் வலம் வருபவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி. இருவரும் சேர்ந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தனர். அப்பொழுது இருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் ஜோடிப் பொருத்ததை கண்டு பொறாமைப்படாத ஆள்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.

அந்த அளவுக்கு க்யூட்டான தம்பதிகளாய் இன்றுவரை வலம் வருகின்றனர். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார். நடிகை ஷாலினி குழந்தகளையும் வீட்டுப் பொறுப்பையும் கவனித்துக் கொள்கிறார்.

அதுபோல அஜித்திற்கு வந்த நல்ல கதையம்சமுடைய படங்கள், அவர் மறுத்த படங்கள், சூழ்நிலையால் அவரால் நடிக்க முடியாமல் போன படங்கள், மற்ற ஹீரோக்கள் நடித்து செம ஹிட்டடித்திருக்கும். அப்படி, அஜித் தவறவிட்ட சில படங்களின் ஜீன்ஸ் திரைப்படமும் தற்போது இணைந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், பிரசாந்த் நடித்து மிகப் பெரிய வெற்றியை பெற்றத் திரைப்படம் தான் ஜீன்ஸ். இந்த திரைப்படத்திற்கான கதை முதலில் அஜித்திடம் தான் சொல்லப்பட்டது. பின்னர் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதன் பிறகே நடிகர் பிரசாந்த் நடித்தார். அந்த மிகப்பெரிய அளவில் பிரசாந்த்க்கு வெற்றியை தேடித்தந்தது.

Views: - 1074

1

0