பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்?: கையெடுத்து கும்பிட்டது இதற்குதானாம்…வாக்குச்சாவடியில் சலசலப்பு..!!
Author: Rajesh19 February 2022, 10:24 am
“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு Beast வரை இவர் சந்திக்காத சாதனைகள் கிடையாது.
எல்லா நடிகர்களுக்கும் தோல்வி படங்கள் வருவது சகஜம். ஆனாலும் அந்த தோல்வியில் தன்னை விட்டுப் போகாத ரசிகர்கள் கிடைப்பதுதான் வரம். விஜய்க்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று சொல்வதைவிட, தோல்வி படம் தந்தால் கூட அதை இன்னொரு வெற்றிப்படத்தினால் அந்த தோல்வி விமர்சனத்தை முறியடிக்கும் சக்தியாக ரசிகர்களுக்கு விஜய் கிடைத்தது தான் வரம்.
இந்த காலகட்டத்தில் அவர் சுமாரான படங்களில் நடித்தாலும் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்ல வைத்தது எந்த நடிகரும் இதுவரை செய்யாத சாதனை இவருடைய லேட்டஸ்ட்.
இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தேர்தலில் வாக்களிக்க இன்று காலை வந்தார். சிவப்பு காரில் வந்த விஜய் அங்கு நேராக சென்று வரிசையில் நின்றார். அப்போது ஒரு பாட்டி விஜய்க்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு எளிமையாக கையெடுத்து கும்பிட்டு விஜய் வணக்கம் வைத்தார்.
ஆனால் சமூக வலைதளங்களில் பொது மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. பொது மக்கள் வாக்களிக்க காத்திருந்த நேரத்தில் அவர்களைத் தாண்டிச் சென்று வாக்களித்து விட்டு வெளியே வந்ததால் விஜய் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரவி வருகிறது.
0
0