அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2025, 5:06 pm

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு பணியாற்றும் துணை ஆய்வாளர் சுமதி என்பவருக்கு புகார் அளித்த பெண் செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது அந்த பெண்ளை தவறான வார்த்தையால் துணை ஆய்வாளர் சுமதி பேசியதை அறிந்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் வருண்குமார் நேற்று மைக்கில் நேரடியாக கூப்பிட்டு பேசிய நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

அவர் பேசியது, அம்மா பேச மாட்டாங்களா. இப்பதான் சார் சும்மா சாப்பிட போய் இருக்காங்க. சரி தொந்தரவு பண்ண வேணாம் விடுங்க. மகளிர் காவல் நிலையத்தை கூப்பிடுங்க.

ஆல் உமன் போலீஸ் ஸ்டேஷன் எதற்காக அரசு உருவாக்குச்சி என்ன காரணத்திற்காக, பெண்கள் பிரச்சனை இருந்தால் உருவாக்கப்பட்டது, அது உங்க ஆய்வாளருக்கு தெரிஞ்சா நல்லது என பேசிய அவர், உங்க ஸ்டேஷனில் சுமதி என்பர் உள்ளார்களா? அந்த அம்மாவை உடனே சஸ்பெண்ட் பண்ணனும் ரேப் கேஸ் ஒரு லேடி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரு என்ன பேசியிருக்காரு தெரியுமா என டிஐ4 வருண்குமார் அந்த பெண்ணும் – துணை காவல் ஆய்வாளரும் பேசிய உரையாடலை மைக்கில் போட்டுள்ளார்.

புகார் கொடுத்த பெண்ணுக்கு பதில் கொடுத்த பெண் துணை ஆய்வாளர். நீ எல்லாம் திமிர் எடுத்து ஆடற, நீ வந்தா என்ன வராட்டி என்ன, உன் வேலை ம***ரை பாரு வை போன என கூறியுளள்ர்.

இந்த ஆடியோவை மைக்கில் போட்டு கேட்க வைத்த டிஐஜி, கேட்டுச்சா,
அஜாக்கிரதையா பேசல, அயோக்கியத்தனமா பேசி இருக்காங்க, AWPS இன்ஸ்பெக்டர் இந்த பாஷையில் தான் பொம்பளைங்க கிட்ட பேசுறீங்களா, இதுக்காக தான் இது உருவாக்கினாங்களா? என டிஐஜி கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள், அப்படி பேச மாட்டாங்க தெரியாம பேசிட்டாங்க சார் சாரி.

வெக்கமா இல்ல இன்ஸ்பெக்டர் சொல்றதுக்கு தெரியாம பேசிட்டாங்கன்னு சொல்றீங்க நீங்க தான் முதல் குற்றவாளி ஆமா பேசினாங்க தப்புன்னு சொல்லாம நீங்க என்ன ஆய்வாளர். மைக்ல பதில் சொல்றீங்களா இல்ல நேர்ல நிக்க வைக்கவா. பேசுனது தப்புதான் நான் எச்சரிக்கிறேன்.

DIG Varunkumar Warn to Ariyalur Women Police Station

அந்தக் காவல் நிலையத்தோட லட்சணம் அப்படி இருக்கு ஒரு நாள் இன்ஸ்பெக்ஷன் வரேன் அப்போ உங்களுக்கு இருக்கு எஸ்பி ஆபிஸ். உடனே அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபீஸ்க்கு அனுப்புங்க அங்க வந்து நிக்கட்டும் இங்கே பெட்டிஷன் எல்லாம் ஹேண்டில் பண்ண வைக்கிற

அதன் பிறகு தொலை மாவட்டமான ராமநாதபுரம், கன்னியாகுமாரி, தர்மபுரி இருந்தாலும் துரத்தி விடுங்க. இந்த மாதிரி காவல் துறையில் அத்துமீறுகிறது பேச்சு இருந்தால் மைக்கில் போடப்படும் மாவட்டத்தில் சொல்லிவிடுங்கள்.

இப்படி வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமாரால் அரியலூர் மாவட்ட காவல்துறையில் மட்டுமல்ல திருச்சி சரக அவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் துறையினரும் பீதியில் உள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!