சோகத்தில் நிறைவு பெற்ற கொசவபட்டி ஜல்லிக்கட்டு..!! (வீடியோ)

14 February 2020, 8:23 pm
Jallikattu Bull Dead - updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொசவப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கோகத்தில் நிறைவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே உள்ளது கொசவபட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இங்கு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கு மதுரை,திருச்சி, புதுகோட்டை,தேனி திண்டுக்கல் ,அலங்காநல்லூர், பாலமேடு நத்தம் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளைகள் பங்குபெறும் இந்த ஆண்டு 650 காளைகள் பங்கேற்க்க வருகை தந்தது.

காளைகளை அடக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 500 பேர் பங்கேற்றனர். காலை 8.00 மணிக்கு ஆரம்பமான ஜல்லிக்கட்டு மதியம் 2.00 மணி வரை நடத்தப்பட்டது.

பாதுகாப்பு பணியில் 200 காவலர்கள் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் . மருத்துவ குழுக்கள் மாடுகளை சோதனை செய்ய கால்நடை மருத்துவர்கள்,தீயணைப்பு துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

பின்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம் வெள்ளி நாணயம் ஆட்டுகுட்டி சைக்கிள் கட்டில் பீரோ உள்ளிட்ட பல பரி பொருட்களை வீரர்கள் தட்டி சென்றனர் அதே போல் கழத்தில் மாடுபிடி வீரர்களுக்கு அடங்காமல் கழத்தில் நின்று விளையாடிய மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போது திண்டுக்கல் வெள்ளோடு பகுதி கல்லுபட்டியை சேர்ந்த பெலிக்ஸ் என்பவரது மாடு வாடி வாசல் வழியாக வெளியேறி காளை மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெளியேறி ஓடியது வெளியே வந்த மாடு வழி தெரியாமல் ஓடியதில் கொசவபட்டி நாடகமேடை பின்புறம் உள்ள தனியார் தோட்டத்து மொட்டை கேணியில் விழுந்ததில் பரிதாபமாக உயிர் இழந்தது.

உடனே அங்கு இருந்த மாட்டு உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கிணற்றில் விழுந்து இறந்த மாட்டை மீட்க பொதுமக்களே கயிறு கட்டி காளையை கிணற்றில் இருந்து மீட்டனர்.

ஜல்லிகட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் காளை மாடு கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உற்சாகமாக தொடங்கிய கொசவபட்டி ஜல்லிகட்டு போட்டி சோகத்தில் நிறைவடைந்தது.

1 thought on “சோகத்தில் நிறைவு பெற்ற கொசவபட்டி ஜல்லிக்கட்டு..!! (வீடியோ)

Comments are closed.