அதிமுக கூட்டணி வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது தேம்பி தேம்பி அழுத திண்டுக்கல் சீனிவாசன் : அதிர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 9:29 pm

அதிமுக கூட்டணி வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது தேம்பி தேம்பி அழுத் திண்டுக்கல் சீனிவாசன் : அதிர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக கூட்டணி கட்சியில் வேட்பாளராக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் திண்டுக்கல்லில் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

அவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்களான கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் வேட்பாளர் பேசிய பொழுது, தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய பொழுது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!