சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்.. குடும்பமே கட்டையால் தாக்கி கொண்ட அதிர்ச்சி வீடியோ!!

21 July 2021, 4:38 pm
dindugal attack - updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் பெற்றோர் மற்றும் சகோதரனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சின்னையா என்ற ஆரோக்கியசாமி (65). இவருக்கு மரியபாக்கியம் (58 ) என்ற மனைவியும், மரியயாகோப், அமல்ராஜ் , லூர்துராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர். சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 3-வது மகனான லூர்துராஜ் இது குறித்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தனது தந்தை சின்னையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த அவரது தாய் மற்றும் சகோதரர் மரிய யாகோப் ஆகியோரையும் அரிவாளால் ஆவேசமாக தாக்கியுள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் லூர்துராஜ் அங்கிருந்த தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜை தேடி வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சொத்து பிரச்சினையால் குடும்பமே அடித்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Views: - 207

1

0

Leave a Reply