முரளிதரன் ஒரு நம்பிக்கைத் துரோகி : விஜய்சேதுபதிக்கு பாசத்துக்குரிய பாரதிராஜாவின் கடிதம்!!

Author: Udayachandran
15 October 2020, 12:49 pm
800 - Updatenews360
Quick Share

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். அதில் இருந்து அவர் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஈழத்தமிழர்கள் கடும் எதிர்பபை தெரிவித்தனர்..

இதன் தொட்ர்ச்சியாக உலக வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், படத்துக்கு 800 என தலைப்பு வைத்து, இயக்குநர் எம்எஸ் ஸ்ரீபதி படத்தை இயக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் நியமிக்கப்பட்டனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நேற்று டிவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹேஷ்டேக்குள் டிரெண்ட் ஆகின. இந்த நிலையில் நேற்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தில் அரசியல் இல்லை எனவும், வறுமையில் இருந்து எப்படி ஒரு கிரிக்கெட் வீரர் சாதிக்கிறார் என்பது பற்றிதான் கதை என விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக கடினம். ஆனால் உங்களுக்கு மக்களின் அன்பு வெகு வேகமாக கிடைத்துள்ளது.

அதற்கு இயல்பான யதார்த்மான பேச்சும் நடிப்பும்தான் காரணம், இன்னும் இது போல புகழ் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ள பாரதிராஜா, தாங்கள் நடிக்கவிருக்கும் 800 திரைப்படம் பற்றி கேள்விப்பட்டேன், அந்த படத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை பற்றி பயோபிக் படமாக உருவாகப்போவதை அறிந்தேன். நம் ஈழத்து பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர் முத்தையா. சிங்கள இனவாததை முழுக்க முழுக்க ஆதரித்த அவர் விளையாட்டு வீரனாக என்ன சாதித்தாலும் தன் சொந்த மக்கள் கொல்லப்பட்ட போது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன், எங்களைப் பொறுத்தவரை முத்தையா ஒரு நம்பிக்கை துரோகி என அந்த அறிக்கையில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன், உங்கள் மீது அன்பு வைத்துள்ள மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், விஜய் சேதுபதி அந்த படத்தை மறுத்திருக்கலாமே என்று… இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம், காலம்காலமாக உள்ஙகள் முகம் வெறுப்போடு எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள், தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும், நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் என்று அந்த அறிக்கையில் இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 51

0

0