விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் வைத்த ட்விஸ்ட்: சந்தோசத்தில் ரசிகர்கள்!!

Author: Rajesh
27 September 2021, 8:00 pm
Quick Share

கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் இன்னும் கொஞ்சம் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருக்கின்றன.

இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளிவந்த நிலையில் இந்த படத்தை பற்றிய மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதியை படத்தின் இறுதியில் படத்தின் இரண்டாம் பாகம் தொடரும் என அறிவித்திருந்தார்.

அதேபோல தற்போது விக்ரம் படத்திலும் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாபநாசம் 2, படம் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்திலும் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 173

1

0