லோகேஷ் கனகராஜின் அடுத்த பிரமாண்டம்… இத்தனை நாள் வைத்திருந்த ரகசியமே இதுதானா..? வெளியான முக்கிய அறிவிப்பு!!
Author: Babu Lakshmanan27 நவம்பர் 2023, 6:04 மணி
மாநகரம், கைதி ஆகிய 2 படங்களை இயக்கிய, திரையுலகினரை கவர்ந்த இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ். நல்ல ஸ்கீரின் பிளே மற்றும் கதை அம்சங்களால் அடுத்தடுத்து விஜய் (மாஸ்டர்), கமல் (விக்ரம்) ஆகிய இரு பிரமாண்ட நடிகர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் எடுத்த லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து, ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இதனிடையே, கடந்த சில தினங்களாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறி வந்தார்.
இந்நிலையில், G squad எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புவதாகவும், எங்கள் தயாரிப்பின் முதல் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருங்கள், என தெரிவித்துள்ளார்.
0
0