ஒரு பெண்ணின் வாழ்க்கையை பங்கு போடும் இரண்டு ஆண்கள்..? விக்னேஷ் சிவனின் அடுத்த அதிரடி..!

Author: Rajesh
30 April 2022, 5:20 pm
Quick Share

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டிருந்தது. இந்த படத்தில் சமந்தா இணைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது அவரிடம் ‘ காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரு ஆண் இரு பெண் காதல் கதையை எடுத்தீர்கள். அதேபோல், ஒரு பெண் இரு ஆண் காதல் கதையை எடுப்பீர்களா ‘ என்று கேள்வி கேட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் ‘ கண்டிப்பாக எடுப்பேன். என்னால் முடியும் ‘ என்று அதிரடியாக பதிலளித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Views: - 610

3

4