300 கி.மீ. பயணித்து CM-மிடம் மனு.. ஒன்னும் நடக்கல ; கணவருடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 4:53 pm

தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அரூர் ரவுண்டானாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு செல்லும் வகையில், அரூர் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே மாற்றுத்திறனாளி பெண் சபானா என்பவர், அவருடைய கணவருடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளி பெண்ணை மாற்றுத்திறனாளியாக இல்லாத ஒரு ஆண் திருமணம் செய்யும் பட்சத்தில், இருவரில் ஒருவருக்கு அரசு வேலை என அரசாணை வெளியிட வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா, இலவச மூன்று சக்கர எரிபொருள் வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே, மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா மற்றும் அவருடைய கணவர் காதர் பாட்ஷா ஆகிய இருவரும் அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!