மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : கொரோனாவில் இருந்து குணமடைந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்!!

13 May 2021, 6:38 pm
Pon Radhakrishnan - Updatenews360
Quick Share

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.

கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் பலர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர், ஒரு நாளில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைகின்றனர். இதில் தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் ஒரு நாளில் பாதிப்படைகின்றனர்.

ஒரு நாளைக்கு நாடு முழுவதும் 3 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இரண்டாம் அலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

Views: - 136

0

0