டாஸ்மாக் டெண்டர் குறித்து பங்கு பிரிப்பதில் திமுக பிரமுகர்கள் இடையே தகராறு : ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 2:06 pm
DMK Issue Audio - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் திமுக இளைஞரணி நிர்வாகியும் திமுக – பேரூர் கழகச் செயலாளரும் பேசிய சர்ச்சை ஆடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மனகடவு கிராமத்தைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி தேர்பட்டி ஆதி. இவரும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவரும் கொளத்துப்பாளையம் பேரூர் கழகச் செயலாளருமான மீசை துரைசாமி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு குறித்து ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோவில் அரசு மதுபானக்கடை பார் டெண்டர் எடுப்பது குறித்தும், கொளத்துப்பாளையம் திமுக பேரூர் கழக செயலாளராகவும் பேரூராட்சி துணைத் தலைவராகவும் இருப்பது குறித்து ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

நான் பரம்பரை தி.மு.க. என்றும், மாற்றுக்கட்சியை சேர்ந்த உன்னை பேரூராட்சி துணைத் தலைவராகவும், உனது மனைவியை கவுன்சிலராகவும் தேர்வு செய்ய அதிக பணம் செலவு செய்துள்ளதாகவும், மீண்டும் ஒன்றிய பதவியை பெற முயற்சிக்க கூடாது என்று கூறுவதும், மறுமுனையில் பேசும் மீசை துரைசாமி என்பவர் தங்களுக்கான டாஸ்மாக் பணத்தை திரும்பி தந்துவிடுவதாக பவ்வியமாக கூறுவதும் மறுமுனையில் பேசிய (ஆதி) நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Views: - 959

0

0