G.O.A.T படத்துக்காக பேனர் வைப்பதில் தகராறு.. விஜய் ரசிகருக்கு கத்திக்குத்து.. குடியாத்தித்தில் பதற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 2:32 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக ஒன்றிய பொறுப்பாளராக செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக CM செல்வம் இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய்யின் GOAT என்ற திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், அந்தப் படத்திற்காக கடந்த 10 ஆம் தேதி CM செல்வம் தரப்பை சேர்ந்த ரியாஸ் மற்றும் அமீன் இருவரும் பேனர் ஒன்றை போட்டுள்ளனர்.

இந்த பேனரில் விஜய் மக்கள் ஒன்றியம் சார்பாக என்று வார்த்தை வந்துள்ளது. இது சம்பந்தமாக ரியாஸ் மற்றும் அமீன் ஆகிய இருவரிடம் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மற்றும் அவர் தரப்பினர் வந்து கேட்டுள்ளனர்.

இதற்கு CM செல்வம் மற்றும் செல்வம் என்கின்ற கலைச்செல்வன் ஆகிய இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது செல்வம் என்கின்ற கலைச்செல்வன் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் மற்றும் கலைச்செல்வனின் தம்பி வீரமணி மற்றும் மச்சான் சிவா ஆகியோர் CM செல்வம் தரப்பினரிடம் வாக்குவாதமும் கைகளப்பும் ஏற்பட்டுள்ளது

அப்போது கலைச்செல்வனின் மகன்கள் அஜய் மற்றும் சஞ்சய் இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து CM செல்வம் என்பவரை தாக்க முயன்ற போது
அருகே இருந்த CM செல்வத்தின் சித்தப்பா மகனான விஜய் (வயது 24) தடுக்க முயன்ற போது அவருக்கு கை மற்றும் தலையில் கத்தியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் காயம் ஏற்பட்ட விஜயின் தந்தை தண்டபாணி குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் குடியாத்தம் போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து

01.செல்வம் என்கின்ற கலைச்செல்வன்

  1. அஜய் மற்றும. 03.சஞ்சய் (மகன்கள்)
  2. விவின் வயது 17 (தம்பி மகன்)

ஆகிய நான்கு பேரை கைது செய்து

தப்பி ஓடிய

  1. வீரமணி (தம்பி)
  2. சிவா (மச்சான்) இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

விஜய்யின் படம் வெளிவர இருக்கும் நிலையில் அதற்கான பேனர் போடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி வெட்டு மற்றும் தந்தை மகன்கள் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?