தரைப்பாலத்தில் எச்சரிக்கையை மீறி பயணம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.. ஷாக் VIDEO!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2024, 9:12 am
flood
Quick Share

தரைப்பாலத்தில் எச்சரிக்கையை மீறி பயணம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்.. ஷாக் VIDEO!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அனைப்பதி பதியில் இருந்த இரண்டு குட்டைகள் முழுவதுமாக நிரம்பி வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டு கோபி, குன்னத்தூர், திருப்பூர் நெடுஞ்சாலையில் தரைப்பாலத்திற்க்கு மேல் அதிகளவில் தண்ணீர் செல்லவதால் 2 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து துண்டிக்கட்டது.

இதில் சாலையை கடக்க கூடாது என்ற அபாய எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் சாலையை கடக்க முயன்ற இருவர் அடித்து செல்லப்பட்டனர்.

இதில் அருகே இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் அவர்களை காப்பாற்ற ஓடி வந்ததில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர்களில் இருவரும் விழுந்தனர். காப்பாற்ற வந்த மேலும் இருவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க: நோயாளிகளை மதம் மாற்ற முயற்சி.. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.!!

தண்ணீரில் விழுந்த நான்கு பேர் மற்றும் இருசக்கர வாகனம் பத்திரமாக மீட்கப்பட்டது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனை அருகே இருந்த ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 210

0

0