கையை விரித்த மாவட்ட நிர்வாகம் : மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 11:06 am
Corona Vaccine 1 - Updatenews360
Quick Share

மதுரை : கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் 2ஆம் தவணை டோஸ் செலுத்த முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன.

இதையடுத்து நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் ஆர்வம் குறைந்தாலும் பின்னர் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர். கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 442 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாததால் 2ம் தவணை செலுத்தி கொள்ள முடியாமல் மக்கள் தவித்தனர்.

கோவிஷீல்டு முதல் தவணை 6 லட்சத்து 44 ஆயிரத்து 944 பேரும், 2ம் தவணையை 1 லட்சத்து 35 ஆயிரத்து 813 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். இன்று 37 மையங்களில் 5400 டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே முதல் மற்றும் 2வது தவணை செலுத்தப்படுகிறது.

Views: - 286

0

0