பு… இருக்கியா..? காவல் துணைக் கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் : வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!

13 July 2021, 5:55 pm
Karur Collector- Updatenews360
Quick Share

கரூர் : கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை ஒருமையில் பேசிய காட்சி வைரலாகி வருகிறது.

கரூரில் ஒரு சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்காக கரூர் நகர பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த கரூர் மாவட்ட ஆட்சியர், பாஜகவினரிடம் பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்தது யார் என்று பாஜகவினரை திட்டயதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் போது துணை கலெக்டருக்கு இணையான பதவியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளரை ஒருமையில் பேசிய ஆட்சியர், நீ புடிங்…டு இருக்கியா ? உன்னை சஸ்பென்ட் பண்ணிடுவேன், மாஸ்க்கு இல்லாமல் கூட்டம் சேத்துகிட்டு, வெடி போட்டுகிட்டு இருக்காங்க, எல்லோரையும் கைது பண்ணவில்லை என்றால் உன்னை சஸ்பென்ட் பண்ணிடுவேன்னு அதிகார தோரணையில் பேசினார்.

இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி, மக்களின் குறை தீர்க்க வைக்கும் அதிகாரி, இன்னொரு அரசு அதிகாரியை தகாத வார்தையில் பேசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கட்சிக்கு சாதமாக செயல்படுவது போல ஆட்சியரின் செயல் உள்ளதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Views: - 328

0

0