‘first aid box இருக்கா…தீயணைப்பான் கருவி வேல செய்யுதா’: தனியார் பள்ளி வாகனங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு!!
Author: Aarthi Sivakumar7 October 2021, 5:28 pm
கோவை: தனியார் பள்ளி வாகனங்களை பி. ஆர். எஸ். மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது வாகனத்தின் உள்ளே சென்று முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், இன்று 309 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நான்கு நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் இதில் முதலுதவிப் பெட்டி, அவசரகால கதவுகள், சானிடைசர் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகிறது.
மேலும், மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக 230 பள்ளிகளில் உள்ள 1226 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.
0
0