கோவையை தொடர்ந்து திருப்பூரிலும் அதிகரிக்கும் கொரோனா : மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்..!

14 September 2020, 6:55 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 498 பேருக்கும், கடலூர் 364 பேருககும், திருவள்ளூரில் 297 பேருக்கும், சேலத்தில் 294 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!

Views: - 11

0

0