மனஉளைச்சலை தரும் அமைச்சர் மனோ தங்கராஜின் P.A : ஒருமையில் பேசுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 8:27 pm

மனஉளைச்சலை தரும் அமைச்சர் மனோ தங்கராஜின் P.A : ஒருமையில் பேசுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு!

அமைச்சர் மனோ தங்கராஜின் உதவியாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜின் உதவியாளர்‌ ஜஸ்டின்‌ என்பவர்‌ கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்களிடம்‌ பலமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மாண்புமிகு அமைச்சர்‌ தெரிவித்ததாக.
தெரிவிக்கும்‌ பொதுமக்கள்‌ நலன்‌ சசர்ந்த கேசப்புகளை கண்ணியத்துடன் வருவாய்த்துறை ஊழியர்கள்‌ செய்து வருகின்றனர்‌.

அதேவேளையில்‌ சில கோப்புகள்‌ விதிகளுக்கு அப்பாற்பட்டு செய்யமுடியாத நிலை வரும்போது வருவாய்ந்துறை ஊழியர்களை பால்லளந்துறை அமைச்சர்‌
அவர்களின்‌ உதவியாளர்‌ ஜஸ்டின்‌ தொலைபேசியிலும்‌, நேரிலும்‌
அவதூறாகவும் மற்றும்‌ ஒருமையிலும் பேசுவது வருவாய்த்துறை ஊழியர்களிடம்‌
மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஜஸ்டினின்‌ நடவடிக்கைகளை கண்டித்து வருகின்ற
22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து வட்டகிளைகள் சார்பிலும் ஒருங்கிணைந்து மாலை நேர போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?