காதல் கணவனை பிரிந்த மகள்…விரக்தியில் தந்தை தீக்குளித்து தற்கொலை: கதறிய குடும்பம்…!!

Author: Aarthi Sivakumar
8 December 2021, 11:25 am
Quick Share

கோவை: காதல் கணவனை பிரிந்து மகள் வாழ்ந்து வந்ததால் விரக்தி அடைந்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில், கிரீன் காம்ப்ளக்ஸ், பகுதியில் வசிப்பவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி ஜமுனா.

ஆனந்த்ராஜ் தனியார் டெய்லர் கடையில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ஷாலினி, இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூத்த மகள் ஷாலினி காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு மூத்த மகள் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஆனந்தராஜ் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 191

0

0