சென்னையில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை : முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை!!

2 March 2021, 11:44 am
DMDK Murder -Updatenews360
Quick Share

சென்னை : முன்விரோதம் காரணமாக தேமுதிக பிரமுகர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பகுதியை சேர்நத் ராஜ்குமார் என்பவர் தேமுதிகவில் நகர துணை செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியில் டெய்லரிங்க கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல தனது கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது, வாகனத்தை வழிமறித்த இரண்டு மர்மநபர்கள் அரிவாளால் ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ராஜ்குமார் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிந்தார். தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 1

0

0