அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் குவிந்த தேமுதிகவினர் : அதிமுகவில் இணைந்தனர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2021, 3:11 pm
DMDK Joins ADMK - Updatenews360
Quick Share

ஈரோடு : கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் தேமுதிகவிலிருந்து விலகிய ஈரோடு வடக்கு மாவட்ட மகரணி செயலாளர் ருக்மணி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியலில் பல்வேறு பரபரப்புகள் ஏற்பட்டு வருகிறது. கூட்டணி உடன்பாடு இழுப்பறி தனித்துப்போட்டி என பல கட்டங்களில் அரசியல் நகர்வுகள் இருந்து வருகிறது.

அதில் கட்சி மாற்றம் என்பது அனைத்து பகுதிகளிலும் பரலாக இருந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் தேமுதிக கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ருக்மணி தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களை அதிமுகவில் இணைத்துக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

Views: - 61

0

0