தினகரன் கூட்டத்தில் மரியாதையை இழந்த தேமுதிக : தொண்டர்கள் குமுறல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2021, 12:15 pm
Dinakaran DMDK - Updatenews360
Quick Share

சென்னை : திருவொற்றியூரில் அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்த போது தங்களுக்கு உரியமரியாதை தரவில்லை என தேமுதிகவினர் பிரச்சாரத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் அமமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியனை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் பிரச்சாரம் செய்த தினகரன், கூட்டணி கட்சியான தேமுதிக பெயரை கூறாமல் விட்டுவிட்டார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த தேமுதிகவினர் விரக்தியடைந்தனர். முறைப்படி அழைக்கவில்லை என்றும், தாங்கள் கூட்டத்திற்கு வருகிறோம என அமமுக பகுதி செயலாளரிடம் கூறிய போதும் மதிக்கவில்லை என்றும் குமுறியுள்ளனர்.

மரியாதை இல்லாத இடத்தில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என கேள்வி எழுப்பிய தேமுதிகவினர், தினகரன் பிரச்சாரக் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து கோஷமிட்டவாறே கலைந்து சென்றனர்.

அதே போல தினகரனின் பிரச்சார கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு கூறியபடி 200 ரூபாய் பணம் கொடுக்காததால், தொண்டர்களை அழைத்து வந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கூட்டம் முடிந்த பின்னர், பணம் கொடுத்து விடுவதாக கூறி சமாதனப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். தேமுதிகவுக்கு வந்த இடமும் சரியில்லை வாக்கப்பட்ட இடமும் சரியில்லை என்ற பழமொழி இந்த சம்பவத்திற்கு பொருந்தியே உள்ளது என கூறலாம்.

Views: - 158

0

0