கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாச்சியரிடமே மனு : தேமுதிக விநோதம்!!
8 September 2020, 4:42 pmதூத்துக்குடி : பட்டா வழங்க லஞ்சம் கேட்பதாக கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி , கோட்டாட்சியரிடமே தேமுதிகவினர் மனு அளித்த சம்பவம் விநோதமாக அமைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலூகாவிற்குட்பட்ட முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 263 ஏக்கர் நிலத்திற்கு சொந்தானமாவர்கள் பெயரை வருவாய் துறையினர் கடந்த 2015ம் ஆண்டு எவ்வித விசாரணை செய்யமால் நீக்கி விட்டனர்.
எனவே மீண்டும் நிலத்திற்கு சொந்தமானவர்களை பெயரை இணைத்து பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தும், கடந்த 4 ஆண்டுகளாக பட்டா தரமால் வருவாய்துறையினர் சம்பந்தபட்டவர்களை அலைக்கழித்து வருவதாகவும், தற்பொழுது அந்த நிலங்கள் உள்ளதா, இல்லையா என்று தெரியாமல் நிலத்தின் உரிமையாளர்கள் தவித்து வருவதாகவும், நிலங்களுக்கு பட்டா வழங்குவதக்கு தனி நபர்கள் மூலமாக வருவாய்துறையை சேர்ந்த சிலர் 5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு வருவதாகவும், லஞ்சம் கேட்கும் வருவாய்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என தேமுதிகவினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை தேமுதிகவினர் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினார்.
மனுவினை வாங்கி படித்த கோட்டாட்சியர் விஜயா, மனுவில் கோட்டாட்சியரும் லஞ்சம் கேட்பதாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தன்னிடமே மனு அளிப்பதா என்று கேட்டதால் , கோட்டாட்சியர் மற்றும் மனு கொடுக்க வந்த தேமுதிகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0