விஜய்யுடன் டிஷ்யூம்? நிருபர்கள் சந்திப்பில் கட் அண்ட் ரைட்டாக பேசிய தேமுதிக விஜய பிரபாகரன்!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2025, 11:59 am

கோவை ரோட்டரி கிளப் தெற்கு 2025-26 ம் ஆண்டிற்கான 42 வது தலைவராக பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் தே.மு.தி.க சார்பில் கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் துவங்குகிறது என்றார்.

உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது என்ற தெரிவித்த அவர் ஆகஸ்ட் 3 முதல் 28 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் இருக்கும் என்றார்.

கட்சியை வலுப்படுத்துவதற்கும் மக்கள் மனதில் நம்பிக்கையை மீண்டும் விதைப்பதற்கும் இந்த பயணம் இருக்கும், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் இருக்கும் என கூறினார்.

ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து கூறுவோம் என்று பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறி இருக்கிறார், வரும் ஐந்து மாதங்கள் கட்சிப் பணிகளும் மக்கள் பிரச்சனையும் கட்சியை வலுப்படுத்துவது தான் எங்களுடைய எண்ணம் என்றார்.

நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பினார். நாங்கள் கூட்டணியில் இருக்கும் பொழுது பிரதமர் வந்து எங்களை பார்க்கலாம் அல்லவா ? பிரதமரை மரியாதை நிமிர்த்தமாக தேவையான சமயங்களில் சென்று சந்திப்போம் எங்களுக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது சந்திப்போம் தற்பொழுது மோடி பிரதமராக வந்து மக்கள் பணியை செய்து உள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை கூறுவோம் என பதில் அளித்தார்.

கமலஹாசன் எம்.பி ஆனதை வரவேற்கிறோம், நீண்ட நாட்கள் சினிமா துறையில் இருந்து இன்று அவர் அரசியலுக்கு வந்து உள்ளார், தி.மு.க சார்பில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரச்சினையை கமலஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தே.மு.தி.க பார்வையில் தமிழக வெற்றிக் கழகம் எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு, தே.மு.தி.க பார்வை மக்களை நோக்கி மட்டும் தான் வேறு எதை நோக்கியும் அல்ல என பதிலளித்து புறப்பட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!