திமுக கொடிக்கம்பம் நடுவதற்காக சாலைகளை சேதப்படுத்துவதா..? பொதுமக்கள் அதிருப்தி… கண்டுகொள்ளதா நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்?

Author: Babu Lakshmanan
24 November 2023, 2:37 pm

விருதாசலத்தில் டீரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை, சேதப்படுத்தி, திமுக கொடி கம்பிகளை, நட்டு வருவதை, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

திமுகவின் இளைஞர் அணி மாநாட்டிற்காக அக்கட்சியின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த மோட்டார் சைக்கிள் பேரணி, இன்று விருதாச்சலம் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை திமுக அமைச்சர் சி.வெ கணேசன் தொடங்கி வைத்து, விருத்தாசலம் நகரம் முழுவதும் திமுகவினர் பேரணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட கடைத்தெரு, ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையம் என சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு, புதிதாக போடப்பட்ட சாலையின், ஓரம் அமைக்கப்பட்டுள்ள, பவர் பிளாக்கில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுத்து, ட்ரில்லர் இயந்திரத்தைக் கொண்டு, சாலையை சேதப்படுத்தி, திமுக கொடி கம்பத்தை நட்டு வருவதை கண்டு, பொதுமக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்து வரும் நிலையில், திமுகவினர் கொடி கம்பம் நடுவதற்காக, புதிதாக போடப்பட்ட சாலையை இயந்திரத்தை, கொண்டு சேதப்படுத்தி வருவதை, மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!