பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர்.. நள்ளிரவில் நடந்த ஷாக் : போலீசார் அதிரடி ACTION!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 1:36 pm
VAO Dmk
Quick Share

பெண் விஏஓவை தாக்கிய திமுக கவுன்சிலர்.. நள்ளிரவில் நடந்த ஷாக் : போலீசார் அதிரடி ACTION!

விழுப்புரம் அடுத்த ஆ. கூடலூர் கிராமத்தில் கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியிடம் மது போதையில் தகராறில் ஈடுப்பட்டதோடு அவரை தாக்கி செல்போனையும் பறித்து சென்ற வழக்கில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி என்பவரை காணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க: மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!!

தன்னை தாக்கிய திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி வாக்கு சாவடியில் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்து நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 554

0

0