பொய்யான தகவல்களை கூறி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஏமாற்றியுள்ளது திமுக : ஆதாரத்துடன் மத்திய இணையமைச்சர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 11:26 am

தூத்துக்குடி : திமுக அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்றமளிக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்.. திமுக அரசு தமிழக மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி என்ன சொன்னார்களோ அதை செய்ய தவறி இருக்கிறது சில பொய்யான தகவல்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஓராண்டு ஆகியும் அந்த தேர்தல் அறிக்கையில் சொல்லி அதை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மயானங்கள் உள்ளன என்கின்ற நிலையில் இது எப்படி திராவிட மாடல் ஆட்சியாகும். சமத்துவம் என்ற சொல்லும் திமுக என்ன சமத்துவம் இங்கே இருக்கிறது. தனித்தனி மயானங்களை உள்ளதை ஒழிப்பதற்கான எந்த ஒரு அறிக்கையை திட்டமும் இல்லை.

தேர்தல் அறிக்கையில் சொன்ன கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி எல்லாம் காற்றில் பறந்து உள்ளது இதெல்லாம் சாத்தியமில்லை என தெரிந்தும் அவற்றை பொய்யாக வாக்குறுதி அளித்த ஆட்சிக்கு வந்த பிறகு அதை அப்படியே மறப்பதே திமுக-வின் வாடிக்கை என குற்றம் சாட்டினார்.

உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வரிகளில் உயர்த்தப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 100 சதவீதம் வரி அதிகரித்துள்ளது ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமை என்றார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார் நாட்டில் எந்த பகுதியிலும் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மக்களை பற்றி கவலைப்படாத அரசு தான் திமுக அரசு இந்த அரசு மக்கள் மீது மட்டுமன்றி ஊழியர் மீதும் கவனம் செலுத்த முடியாத அரசாக உள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே லாக்கப் டெத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திருவண்ணாமலை, சென்னை என பல பகுதிகளில் நிறைய லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல இடங்களில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்ட சர்வதேச நிலைமைகளை பொருத்து கேஸ் விலை அவ்வப்போது  ஏற்றம் இறக்கம், இறக்கும் இருந்த போதும் மக்களுக்கு கிடைக்கும் மானியம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

தமிழக அரசு தொடர்ந்து இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு அனைத்து மதத்திற்கான நடைமுறைகளை பின்பற்றும் அரசாக இருக்க வேண்டும்.

ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுவது மிகவும் கண்டிக்க கூடியது. இது இந்து மக்களை மிகவும் வேதனைப் படுத்தி உள்ளது மக்கள் மிகவும் கோவத்தில் உள்ளனர், மக்கள் உரிய நேரத்தில் இந்து மதத்திற்கு எதிரானவர்களுக்கு தக்க பதிலடி  கொடுப்பார்கள் என்றார்.

மீன்வளத் துறையில் ராமேஸ்வரம் பகுதியில் முதன்முறையாக மீனவ பெண்களின்  பொருளாதார முன்னேற்றத்திற்காக  இந்தியாவில் முதன்முறையாக கடல்பாசி பூங்கா இந்த பகுதியில் அமைய உள்ளது.  தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை கிடைத்ததும் அந்த பணி தொடங்கப்படும்.

மீனவர்களுக்கு ஆழ்கடல் சென்று மீன் பிடிப்பதற்காக ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அதிகம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக என்று அவர் குற்றம் சாட்டினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?