குட்கா பொருட்களை வியாபாரம் செய்த திமுக நிர்வாகி கைது: 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
1 July 2021, 7:31 pm
Quick Share

திருப்பூர்: வெள்ளகோவிலில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருளை மொத்த வியாபாரமாக விற்று வந்த திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 50,000 ரூபாய் மதிப்புமிக்க 40 கிலோஎடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொத்த வியாபாரமாக விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரைச் சேர்ந்த நிஜம் செல்வம் @ செல்வம் என்பவரை காங்கேயம் டி.எஸ்.பி. குமரேசனின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருளை மொத்த வியாபாரமாக விற்று வந்ததையடுத்து, இவரிடம் இருந்த 50,000 ரூபாய் மதிப்புமிக்க 40 கிலோஎடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்வம் வெள்ளகோவில் நகரட்சியின் முன்னாள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவர். தீவிர திமுக ஆதரவாளர் ஆவார் . இவருக்கு கடந்தமுறை தற்போதைய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இடையே கருத்துவேறுபாடு ஏற்படவே திமுகவின் வேறு ஒரு நிர்வாகிக்கு வெள்ளகோவில் 3வது பகுதியில் போட்டியிட கட்சியில் இருந்து வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் செல்வம் அவருடைய மனைவியை சுயேட்சையாக களமிறக்கி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 393

0

0