பெண் வார்டு உறுப்பினர் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி : தகாத வார்த்தைகளால் அர்ச்சனை… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 3:07 pm
karur dmk 1- updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே பெண் வார்டு உறுப்பினர் வீடு புகுந்து திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்சேவப்பூர் பகுதியில், கடந்த 2019 ம் ஆண்டில் தார்சாலை போடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அதற்கான வேலை தற்போது தான், என்.ஜி.ஆர்.எஸ் திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. இதன் ஒப்பந்ததாரர் யாரென்றால், தற்போது திமுகவில் இணைந்த கடவூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரான கடவூர் செல்வராஜின் ஆதரவாளரான தமிழ் பொன்னுச்சாமி.

இவர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் யாரையும் அழைக்காமல், ஊராட்சிமன்ற தலைவர், அங்குள்ள வார்டு உறுப்பினருக்கும் தகவல் சொல்லாமல், கீழ்சேவாப்பூர் பகுதியில் புதிய சிமெண்ட் சாலை ஒன்றினை ரூ 6.50 லட்சம் மதிப்பில் அமைக்க முயன்றுள்ளார். அதிகாரிகள் யாரையும் அழைக்காமல், ஒப்பந்த்தாரரே சென்று, எல்லாத்தையும் கடவூர் செல்வராஜ் பார்த்துக்கொள்வார் என்றும், அவரோ அதாவது தற்போது திமுகவில் இணைந்த கடவூர் செல்வராஜுன் பெயரை பயன்படுத்தி, நான் பார்த்துக்கொள்கின்றேன், அனைத்தையும் சேர்மன் பார்த்துக்கொள்வார் என்று கூறி, பூமி பூஜையில் ஈடுபட முயன்றுள்ளார்.

அப்போதும், அந்த பகுதியின் ஊராட்சி வார்டு பெண் உறுப்பினர் சசிகலா மற்றும் அவரது கணவர் அருள்முருகன் ஆகியோர் தடுத்து, எங்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் எந்த தகவலும் சொல்லவில்லை என்றும், ஏன் ? அரசுக்கு கூட தெரியப்படுத்தவில்லை என்று கூறியதற்கு, அங்கு வாக்குவாதம் நீடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பூமி பூஜையை நிறுத்திய விரக்தியில், திமுக கடவூர் ஒன்றியப்பெருந்தலைவரின் ஆதரவாளர் தமிழ் பொன்னுச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளரான அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுத்துவுடன் இணைந்து, மேல்சேவாப்பூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய வார்டு பெண் உறுப்பினர் சசிகலாவின் வீட்டிற்குள் தாக்க முயற்சித்துள்ளனர். இரவு நேரத்தில் வீடு புகுந்த இருவரும் அங்கு தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், பெண் வார்டு உறுப்பினர் மற்றும் கணவருக்கு கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.

ஒரு பெண் வார்டு உறுப்பினர் என்றும் பாராமல், இரவு 9 மணியளவில் சசிகலா மற்றும் அவரது கணவர் அருள்முருகன் ஆகிய இருவரையும் கொலைமுயற்சி தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Views: - 248

1

0